
சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் கிறிஸ் லின், அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். வேறுயாரும் தேவையான அளவிற்கு அதிரடியாக ஆடவில்லை. சூர்யகுமார் 23 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.
இஷான் கிஷான் 19 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். மற்றபடி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, கிரண் பொல்லார்டு, கருணால் பாண்ட்யா ஆகியோர் ஏமாற்றினர். கேப்டன் ரோகித் ஷர்மா 19 ரன்களில் ரன்அவுட் ஆனார்.
பெங்களூரு அணியின் சார்பில், ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ராகுல் சஹாரும் ரன்அவுட் ஆனார்.
எட்டுவதற்கு, சற்று எளிய இலக்கை, கோலியின் பெங்களூரு அணி எட்டுமா?
[youtube-feed feed=1]