மும்பை:
சாதிய ரீதியாக சீனீயர் மாணவிகள் துன்புறுத்தியதால், முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவத்தில் முதுநிலை படிப்பு படித்து வந்த டாக்டர் பாயல் தாத்வியின் அம்மா கூறும்போது,
டோபிவாலா நேஷனல் மருத்துவக் கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர்ந்த 6 மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை.
என் மகள் பாயலை சீனியர் மாணவிகள் தொடர்ந்து சாதிய ரீதியாக துன்புறுத்தி வந்தனர்.
இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
22-ம் தேதி என் மகள் துப்பட்டாவில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3 சீனியர் மாணவிகள் சாதிய ரீதியாக துன்புறுத்தியதை தாங்க முடியாமல் என் மகள் இந்த முடிவுக்கு வந்துவிட்டாள் என்றார்.
தற்கொலை செய்து கொண்ட டாக்ர் பாயலும், தலைமறைவாகியுள்ள 3 மாணவிகளும் முதுகலை படிப்பு படித்து வந்துள்ளனர்.
3 மாணவிகள் மீதும் எஸ்சி.,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.