மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் துஷார் பவார் தனது மனைவிக்குத் தெரியாமல் அடிக்கடி தாய்லாந்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுவரை மூன்று முறை தனது நண்பர்களுடன் தாய்லாந்து சென்றுள்ள துஷார் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று கருதினார்.

இதனால் தாய்லாந்து சென்று வந்த விவரங்கள் அடங்கிய 12 பக்கங்களை தனது பாஸ்போர்ட் புத்தகத்தில் இருந்து கிழித்த துஷார் அதற்கு பதிலாக வெற்று காகிதங்களை அதில் ஒட்டினார்.
ஆனால், கடந்த 11ம் தேதி மீண்டும் தாய்லாந்து செல்ல நினைத்த துஷார் விமான நிலையம் வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த காலி பக்கங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாய்லாந்து சென்று வந்தது மனைவிக்கு தெரியக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட் பக்கங்களை கட் செய்தது தெரியவந்துள்ளது.
[youtube-feed feed=1]