ஐபிஎல் : பஞ்சாப்பை வீழ்த்திய மும்பை

Must read

 

Mumbai Indians beat Kings XI Punjab by 8 wickets

 

ஐபிஎல் டி-20 போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து198 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அம்லா 60 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி  15.3 ஓவர் முடிவில் அபாரமாக விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. மும்பையில் அதிகபட்சமாக பட்லர் 37 பந்துகளில் 77 ரன்களை குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

More articles

Latest article