புதுடெல்லி: ராஜஸ்தான் அணியுடனான தனது முதல் லீக் போட்டியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
டாஸ் தோற்று, முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழந்து, 171 ரன்களை சேர்த்தது.
பின்னர், சற்று கடிமான இலக்கை விரட்டிய மும்பை அணியில், டி காக், 50 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். கருணால் பாண்ட்யா 26 பந்துகளில் 39 ரன்களை சேர்த்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்களை அடித்தாலும், ராஜஸ்தான் அணி, தேவையற்ற கூடுதல் ரன்களாக 17 ரன்களை வாரியிறைத்தது.
இதனால், 18.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 172 ரன்கள் சேர்த்து வென்றது மும்பை அணி. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் தனது 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது அந்த அணி.