மும்பை

மும்பை மாநகராட்சி நகரின் 4 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காகத் தனி வார்டு அமைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொடங்கி நாடெங்கும் பரவியது.  சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 3000 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 90000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது.

இந்தியாவில் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இதையொட்டி நாடெங்கும் உள்ள அனைத்து நகரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன.

மும்பை மாநகராட்சி இந்த கொரோனா வைரஸ் நோயாளிக்காக நகரில் 4 மருத்துவமனைகளில் தனி சிகிச்சை வார்டுகள் அமைத்துள்ளது.   மொத்தம் 100 படுக்கைகள் கொண்ட இந்த வார்டுகள் பாந்தரா, ஜோகேஸ்வர், குர்லா மற்றும் காட்கோபர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளை கவனிக்க 26 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.