மும்பை

பருவ மாற்றங்களால் கடல் மட்டம் உயர்வதால் மும்பை நகரின் பெரும்பான்மையான இடங்கள் நீரில் மூழ்கி விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை இந்தியாவின் நுழை வாயில் எனஅழைக்கப்படுகிறது.  இங்கு காலநிலை செயல் திட்டத்தின் இணைய தளத்டை மகாராஷ்டிர மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தொடங்கி வைத்தார்.   இந்த விழாவில் கலந்துக் கொண்டு மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் கலந்துக் கொண்டு உரையாற்ற்னார்.

அவர் தனது உரையில், “மும்பை நகரில் எப்போதும் இல்லாத அளவிற்கு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே நாம் விழிப்புடன் செயல்படாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் ஆபத்தான சூழலை சந்திக்க நேரிடும்.  வரும் 2050ம் ஆண்டுக்குள் மும்பை நகரின் முக்கிய வணிக தளங்களான   நரிமன் பாயிண்ட் மற்றும் மந்திரலாயா உள்ள மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதைத் தடுக்கும் வகையில், மும்பை மாநகரின் செயல் திட்டத்தை தயாரித்துள்ளோம்.  நாங்கள் காலநிலை நிச்சயமற்ற தன்மையால் மிகவும் பாதிக்கக்கூடியப் பகுதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இயற்கை மாற்றங்கள் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வருகின்ற  2050-ஆம் ஆண்டில் சென்னை‌, மும்பை உள்ளிட்ட ஏழு ந‌கரங்கள் தண்ணீரினுள் மூழ்கும்  அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.,

சுமார் 3‌ கோடியே‌ 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது.  ஆகவே இந்த இயற்கை சீற்றங்களை ஓரளவிற்கு தடுக்க, கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் கடல்மட்ட உயர்வைத் தடு‌த்து இந்த பேராபத்தை‌ ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.