டில்லி

டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்குத் தனிக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து  நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கழிப்பறைகள் உள்ளன.   ஆனால் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு கழிப்பறைகள் கிடையாது.

எனவே அவர்களுக்குக் கழிப்பறை பயன்படுத்த கடும் பிரச்சினைகள் எழுகின்றன.  இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக டில்லி மெட்ரோவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்காகத் தனிக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆண், பெண் கழிப்பறைகள் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே தனிக் கழிப்பறை உள்ளது.  தற்போது திருநங்கைகளுக்கு தனிக் கழிப்பறை அமைத்துள்ள டில்லி பெருநகர் ரயில் கழகத்துக்குப் பொதுமக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.