மும்பை

முடி மாற்று அறுவை சிகிச்சை நட்ந்த இரு தினங்களில் மும்பை தொழிலதிபர் மரணம் அடைந்துள்ளார்.

மாதிரி புகைப்படம்

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரவண் குமார் சவுத்ரி.   சுமார் 43 வயதாகும் இவர் மும்பையில் உள்ள ஹீராநந்தினி மருத்துவ மனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.  கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சவுத்ரியின் தொண்டை மற்றும் முகம் கடுமையான வீக்கத்துடன் காணப்பட்டது.   இதற்கு அலர்ஜி காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.   அத்துடன் இந்த அலர்ஜி காரணமாக அவருக்கு தொண்டை மற்றும் முகம் வீங்கியதால் மூச்சு விட அவதிப்பட்டார்.

அவரை உடனடியாக தீவிர மருத்துவ சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.   சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.   அவருடைய இதயத்துக்கு மின் அதிர்வு தரப்பட்டும் இயங்கவில்லை.   ஆகவே அவர் நேற்று காலை 6.45 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இறப்பதற்கு இரு தினங்கள் முன்பு சவுத்ரி முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார்.  இவர் தலையில் 9500 முடி வேர்கள் பொருத்தப்பட்டு 15 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இவர் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும் என காவல்துறை அறிவித்துள்ளது.