மும்பை

மும்பை பால விபத்தில் மரணம் அடைந்த செவிலியர்களின் உறவினர் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம் என மறுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று மும்பையில் டோம்பிவிலி பகுதியில் உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் மரணம் அடைந்தவர்களில் அந்தப் பகுதியில் உள்ள மருத்தமனை செவிலியர்கள் மூவரும் உள்ளனர். இவர்கள் மூவரும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலான தோழிகள் ஆவார்கள். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்த செவிலியர்களின் உறவினர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் பக்தி ஷிண்டே என்பவரின் 13 வயது மகன், “இந்த ரூ. 5 லட்சம் எங்களுக்கு தேவை இல்லை. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து தண்டன அளிக்க வேண்டும். அதுதான் எங்களுக்கு தேவையாகும். என கூறி உள்ளார்.

மற்றொரு செவிலியரான பிரபா தனது கணவர் அபே மற்றும் இரு சிறு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அபே, “இந்த ரூ. 5 லட்சத்தினால் எனது மனைவி எனக்கு மீண்டும் கிடைக்க மாட்டார். எனது குழந்தைகளுக்கும் தாயார் திரும்பி வர மாட்டார். அதை விட இந்த விபத்துக்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் எங்கள் மனது சற்று நிம்மதி அடையும். மீண்டும் இது போல் விபத்து தவிர்க்கப்படும்” என கூறி உள்ளார்.