மும்பை: நாட்டிலேயே ஒரு கோடி டோஸ்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட முதல் மாவட்டமாக மகாராஷ்டிரா மாநில தலைநகர் மூம்பை தேர்வாகி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை 67,72,11,205 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,85,687 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவர 6கோடியே 15 லட்சத்து 16ஆயிரத்து 137 பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 4,47,71,037 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1,67,45,100 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், மும்பை மாவட்டத்தில் மட்டும் 1கோடிக்கு அதிகமான டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது நாட்டிலேயே முதலாவது மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.