மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு..
அரசியல் வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,தாதாக்கள் உள்ளிட்டோருக்குப் பணிந்து நடந்தால் தான் மும்பையில் போலீசாகக் காலம் தள்ள முடியும்.
இந்த நிலையில் நேற்றைக்குக் கால் பதித்த கொரோனா ஆடும் ஆட்டத்தையும், போலீசாரால் தாள முடியவில்லை.
ஆம். கொரோனா ’தர்பார்’ மும்பை போலீசை ஆட்டிப்படைக்கிறது.
முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே பாஷையில் சொல்வதானால்- 24 மணி நேரமும் மும்பை போலீசார் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்..
பலன் ஏதாவது உண்டா?
கொரோனா தாக்கம் மும்பையில் உச்சநிலையை எட்டிய பின், அதில் இருந்து மக்களை காக்க, போராடிய போலீசார் 194 இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர்.
இதுதான் போலீசார் கண்ட பலன்.
அதிர்ச்சியூட்டும் தகவல் இனிமேல் தான்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு 5 போலீசார் உயிர் இழந்துள்ளனர்.
இவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட, அப்பாவி ஜீவன்கள்.
கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள போலீசார் எண்ணிக்கை, 714.
இந்தியாவிலேயே கொரோனாவால் இறந்து போனோர் மகாராஷ்டிராவில் தான் அதிகம் என்பது தெரியும் தானே?
– ஏழுமலை வெங்கடேசன்