கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது .மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள் கடந்த ஒன்றரை மாதமாக மூடப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் திறக்க இன்னும் மூன்று மாதம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் திரைப்படங்களை நேரடியாக OTT தளங்களில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.


இந்நிலையில் மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
OTTயில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும், நிலைமை சீரடையும் வரை காத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.