காபூல்: புதிய ஆப்கானிஸ்தான் அரசின் தலைவராக முல்லா பரதர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். புதிய அரசு குறித்த அறிவிப்பு இன்று மதியம் தொழுகைக்கு பிறகு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த ஹமீது கர்சாய், உலக நாடுகளின் சமாதானமாக சென்று நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டு வந்தார். இந்தியா சார்பிலும் ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. ஆனால், அங்கு தாலிபான்கள் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்ததால், அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தது. சுமார் 20ஆண்டு காலம் ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம், அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்றதும், அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 31ந்தேதிக்குள் அமெரிக்க ராணுவம் முற்றிலும் அங்கிருந்து வெளியேறியது.

இதற்கிடையில், பைடன் பதவி ஏற்றதும் தாலிபான்கள் மீண்டும் தலைதூக்கினர். ஒவ்வொரு நகரங்களாக கைப்பற்றிய நிலையில், இறுதியாக கடந்த மாதம் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். இதனால், அதிபர் கர்சாய் அங்கிருந்து தப்பிச்சென்று வலைகுடா நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் தலிபான்கள் மும்முரம் காட்டிவந்தனர். cலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன்  உறவை மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருந்தாலும், தாலிபான்களின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏனென்னறால், அவர்களின் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்களே எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு முல்லா பரதர் தலைமை தாங்குவார் என்று தலிபான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக ஹைபத்துல்லா அகுந்த்ஸடா தலிபான்களின் உச்ச தலைவராக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவருக்கு உயர் பதவி வழங்கப்படும் என்றும்,   மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகளின் கவனம் ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு மத்தியில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷெரீப், தெற்கில் இருக்கும் கந்தஹார் ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை தொடங்கியுள்ளதாக ஐநா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல், ஆப்கானிஸ்தானில் தூதரகத்தை தொடர்ந்து இயக்க சீனா உறுதி அளித்திருப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் இன்று டிவிட்  செய்துள்ளார்.