க்னோ

மாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் மருமகள் அபர்ணா முத்தலாக் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

முத்தலாக் தடை உத்தரவு மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் அளித்ததை ஒட்டி கடும் விவாதம் நடந்து வருகிறது.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளில் சமாஜ்வாதி கட்சியும் ஒன்றாகும்.   இதன் தலைவரும் நிறுவனர் முலாயம் சிங் மகனுமான அகிலேஷ் யாதவ் இந்த மசோதாவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ்.   இவருடைய மனவி அபர்ணா யாதவ் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.   அபர்ணா தனது கட்டுரையில், “இந்த முத்தலாக் தடை மசோதா மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை.     இது சட்டாமானால் பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கும்.   குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு நீண்ட காலமாக சந்தித்து வரும் பிரச்னைனகளுக்கு தீர்வைத் தரும்.     அவர்கள் பெரிதும் பலனடைவார்கள்”  என தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுரை  சமாஜ்வாதி கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.   அபர்ணா யாதவ்  இது போல அதிர்ச்சியை அளிப்பது முதல் முறை அல்ல.    உத்திரப் பிரதேசத்தில் பாஜக வென்று ஆட்சி அமைத்த போது முதல்வர் யோகியை சந்தித்து அவருக்கு அபர்ணா யாதவ் மற்றும் அவர் கணவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.    லக்னோவில் பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் அளித்த இஃப்தார் விருந்தில் அபர்ணா கலந்துக் கொண்டிருந்தார்.    முன்பு   பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி படம் எடுத்துக் கொண்ட போது அதையும் இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை அபர்ணா ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத் தக்கது.