லக்னோ:

பின்தங்கிய வகுப்பினருக்கான உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ். மோடியைப் போல போலி தலைவரல்ல என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.


உத்திரப் பிரதேச மாநிலம் மணிப்பூரியில் நடந்த தேர்தல் பேரணியில் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

24 ஆண்டுகளுக்கு பின்பு முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றினர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாயாவதி,பின் தங்கிய வகுப்பினரின் உண்மையான தலைவர் முலாயசிங் யாதவ் தான். மோடியைப் போல போலியாக பேசித் திரிபவர் அல்ல.

மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இணைந்துள்ளோம் என்றார்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சிகள் 78 இடங்களில் போட்டியிடுகின்றன.

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரலி தொகுதியிலும் இந்த கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.