லக்னோ: சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உ.பி. மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், அது வதந்தி, அவர் நலமுடன் இருக்கிறார் என்று அவரது மருமகள் அபர்ணா யாதவ் தெரிவித்து உள்ளார்.
உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ். . மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். உ.பி சட்டசபைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், முலாயம்சிங் காலமானதாக செய்திகள் பரவின. பல ஊடகங்களும் முலாயம் காலமானதாக செய்திகளை பதிவிட்டன. இந்த நிலையில், முலாயம் சிங் இறந்ததாக வெளியான தகவல் வதந்தி என்றும், அதே பெயரைச் சேர்ந்த வேறு ஒருவர் காலமானதாகவும் கூறப்படுகிறது. அதைத்தான் ஊடகங்கள் தவறுதலாக முன்னாள் முதல்வர் காலமானதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இறந்தவர், மூத்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அவரது பெயரும் முலாயம் சிங் யாதவ். அவரது மறைவைத்தான் ஊடகங்கள் தவறுதலாக செய்தியாகிவிட்டன. அவரது இறுதி சடங்குகள் 2020 அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்டன. அவருக்கு வயது 92. யாதவ் சில காலம் முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மூன்று முறை எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமபத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். இவரது மறைவைத்தான், ஊடகங்கள், முன்னாள் முதல்வர் முதலாயம் சிங் யாதவ் என தவறுதலாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சிங்கின் 2வது மகன் பிரதீக் யாதவின் மனைவியான அபர்ணா பிஷ்த் யாதவ், நோதாஜி (முலாயம்சிங்) நலமுடன் இருக்கிறார். அவர் தொடர்பான வெளியான செய்தி வதந்தி என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.