கொல்கத்தா: கடந்த 2017ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே, முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமான முகுல்ராய், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பலர், மீண்டும் தாய்க்கட்சிக்கே திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். அதுபோல, கடந்த 2017 ம் ஆண்டு நவம்பரில் டி.எம்.சியின் முன்னாள் தளபதியாக இருந்த ராய், பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருந்த ராய் பாஜகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பலர் டிஎம்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி வந்தனர். முகுல்ராய் மாநில பாஜக துரைணத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், தேர்தலில் மம்தா மீண்டும் வெற்றிபெற்றதும், பாஜவுக்கு சென்றவர்கள், மம்தாவிடம் மன்னிப்புகோரி கடிதம் எழுதி, டிஎம்சிக்கு திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் முகுல்ராயும் இணைந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு மாறிய முதல் முன்னணி டி.எம்.சி தலைவரில் ஒருவரான ராய், அவருடன் மகன் சுப்ரான்ஷும் இன்று திரிணாமுலுக்கு திரும்பினர்.
அவரை மீண்டும் கட்சியில் வரவேற்கும் நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் மற்றும் கட்சி பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி, சுப்ரதா முகர்ஜி மற்றும் சுப்ரதா பக்ஷி உள்ளிட்ட முழு திரிணாமுல் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முகுல்ராய், தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, பாஜகவில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார். பாஜகவில் இருந்து வெளியே வந்த பின்னர், அறியப்பட்ட அனைத்து முகங்களையும் மீண்டும் பார்ப்பது சந்தோசமாக உள்ளது என்றார்.
[youtube-feed feed=1]