புதுடெல்லி:
ந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய அரசு கூறியதை மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி மறுத்துள்ளார்.

இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீலான 91 வயது நிரம்பிய கேகே வேணுகோபால் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017 முதல் இந்த பதவியில் செயல்பட்டு வருகிறார். அட்டர்னி ஜெனரல் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டு காலத்துக்கு உரியது.

அதன்படி கேகே வேணுகோபால் பதவிக்காலம் 2020ல் முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் மேலும் 2 ஆண்டுகள் வரை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் ஆன நிலையில் கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி ஜூன் மாதத்தில் இருந்து கூடுதலாக 3 மாதம் வரை கேகே வேணுகோபால் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வருகிறது. இந்த பதவி நீட்டிப்பு காலம் என்பது வரும் 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அடுத்த அட்டர்னி ஜெனரல் நியமனம் தொடர்பான நடைமுறைகள் தொடங்கின.