மும்பை

முகநூல் நிர்வாகம் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை வாங்கியதால் முகேஷ் அம்பானி சீன செல்வந்தர் ஜேக் மாவை பின் தள்ளி முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

 சமூக வலைத் தளமான முகநூல் தனது உலகச் சந்தையைத் தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது.   வாட்ஸ்அப்பை விலைக்கு வாங்கிய பிறகு தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை சுமார் 5.7 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கி உள்ளது  இதன்மூலமொரே குடையின் கீழ்  டிஜிட்டல் செயலி மற்றும் ஒயர்லெஸ் சேவை ஆகிய இரண்டும் வழங்கப்பட உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு பங்கு வர்த்தக சரிவினால் கடும் வீழ்ச்சி அடைந்தது.    இவ்வாறு ஆசியாவில் வீழ்ச்சி அடைவது இதுவே முதன் முறையாகும்.   இதையொட்டி அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜேக் மா ஆசியாவின் செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார் .  தற்போது அமெரிக்கப்  பங்குச் சந்தியில் அலிபாபா நிறுவனம் 1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

அதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை முகநூல் வாங்கியதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.  இது அலிபாபா நிறுவனர் ஜேக் மாவின் சொத்து ம்திபை விட 3.2 பில்லியன் டாலர் குறைவாகும்.  தற்போது ஜேக் மாவை பின் தள்ளி முகேஷ் அம்பானி ஆசிய செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.