கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர்.

அதன் தமிழ் ரீமேக்கை ரெடி செய்தார் இயக்குனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால், முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளாராம். நாளை 24ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

 

[youtube-feed feed=1]