ராமநாதபுரம்: போக்சோவில் கைதான முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும், அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப், மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்து வந்ததாக புகார் கூறப்பட்டது. புகாரை விசாரணை நடத்திய காவல்துறையினர், கடந்த ஜூன் மாதம் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆசிரியர் ஹபீப் முகம்மது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர். இவருக்கு வயது 38. இவர், பள்ளி மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததக புகார்கள் பதிவு செய்யப்பட்து. தற்போது அவரை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.