பெங்களூரு: நில மோசடி வழக்கில் (மூடா வழக்கு( இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவித்து, கர்நாடக மாநில லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி தொடர்பாக ‘ஆதாரங்கள் இல்லை’ என்று, அவர் தலைமையிலான அரசின் போலீசார் கூறியதால், ‘குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை’ என கூறி நீதிமன்றம், சித்தராமையா மற்றும் அவரது மனைவியையும் விடுதலை செய்துள்ளது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கை விசாரித்து வந்த லோக்ஆயுக்தா நீதிமன்றம், பலகட்ட விசாரணைக்குப் பின்னர், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனக்கூறி இருவரையும் குற்றமற்றவர் என லோகாயுக்தா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும் புகார்தாரர் சினேகமாயி கிருஷ்ணாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சினேஹ்மியா கிருஷ்ணா ஆகியோர் ஆளுநரிடம் புகார் அளித்தனர். விஜயநகர் லேஅவுட்டில் நிலம் கையகப்படுத்த முதல்வர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
முதலமைச்சரும் அவரது மனைவியும் மூடா நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக மாநில ஆளுநர் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அனுமதி அளித்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் உயர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நில ஒதுக்கீட்டு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிப்பது அவசியம் என்று நீதிமன்றம் கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இது சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த விஷயத்தைக்கொண்டு மாநில பாஜகவினர், சித்தராமையா தனது முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர். ஆனால் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். வழக்கின் விசாரணையை எதிர்கொள்வேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, சித்தராமையா மீதான வழக்கு மாநில லோக்ஆயுக்தா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், போதிய ஆதாரம் இல்லை என கூறி, மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி உள்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.
இது கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெறும் உற்சாகத்தை அளித்துள்ளது.