சென்னை: மகளிர் இலவச பேருந்துகளில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க, பீக் அவர்சில், கூடுதலாக 700 டீலக்ஸ் பேருந்துகளை மகளிர் இலவச பயணத்திற்காக இயக்க சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள டீலக்ஸ் பேருந்துகள் பிங்க் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் திமுக அரசு மகளிருக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. பீங்க நிறத்தில் காணப்படும் இந்த பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பெண்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிலையில், சென்னையில் மகளிர் இலவச பயணத்திற்கு வசதியாக, தற்போது பயன்பாட்டில் உள்ள டீலக்ஸ் பேருந்துகளை, இலவச பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளத. அதனப்டி, கூடுதலாக 700 டீலக்ஸ் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றி பெண்களின் இலவச பயணத்துக்காக இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இலவச பயணத்தை வழங்கும் பேருந்துகளை அடையாளப்படுத்தும் வகையில் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சில பேருந்துகளுக்கு முன் பக்கமும், பின் பக்கமும் மட்டும் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்துகளுக்கு முறையான பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான பேருந்துகள், மிகவும் பழைய பேருந்துகளாகவும், இருக்கைகள் உள்பட பேருந்தின் பல பாகங்கள் உடைந்து நொறுங்கியும் காணப்படுகின்றன. மேலும் மழை பெய்தால் ஒழுகும் நிலையிலும் உள்ளன. இதனால், இவற்றை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போது, . சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் 3,376 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இருந்தாலும் காலை மாலை பீக் அவர்ஸ் என்பபடும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களும் செல்லும் நேரம் மற்றும் திரும்பும் நேரங்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் மேலும் 700 டீலக்ஸ் பேருந்துகளை மகளிர் பேருந்துகளாக மாற்றம் செய்து இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. புதிய பேருந்துகள் வாங்க பல மாதங்கள் ஆகும் என்பதால், தற்போதைய தேவைக்கு ஏற்கனவே இயக்கத்தில் உள்ள டீலக்ஸ் பேருந்துகளை கலர் மாற்றி இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக ஒவ்வொரு பணிபமனைகளிலும், பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாத அதிக கட்டணத்துடன் இயங்கி வரும் சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றுக்கு பிங்க் நிறம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகரின் 30 பணிமனைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த 700 சிவப்பு நிற பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.