திருச்சி: திருச்சி அருகே உள்ள அரசு வேளாண் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் மாணாக்கர்களிடையே பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகேயுள்ள நவலூர் குட்டப்பட்டில் அரசு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராயச்சி மையம் (Anbil Dharmalingam Agricultural College & Research Institute) உள்ளது, இங்கு செப்டம்பர் 1ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதனால், அங்கு படிக்கும் வெளி இடங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோட்டை சேர்ந்த எம்.எஸ்சி 2-ஆம் ஆண்டு படித்துவரும் மாணவி சவுந்தர்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த செளந்தர்யாவிடம் பேச அவரது பெற்றோர் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அவர் அழைப்பை ஏற்காததால் இதுகுறித்து விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது அறைக்கு வந்த விடுதி நிர்வாகிகள், அறையின் கதவை தட்டியுயும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சவுந்தர்யா வாயில் ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து ராம்ஜிநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவி சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சவுந்தர்யா விஷயம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது ரிய வந்ததுள்ளது.
விடுதி அறையில் வேளாண் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.