ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

Dhoni

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தலா ஒரு வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் தோனி இடம்பெறாததாலும், டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்காததாலும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தோனி அணியில் இருந்து ஓரம் கட்டப்படுகிறாரோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனியின் பெயரை பிசிசிஐ அறிவித்தது.

தோனி அணியில் இடம் பெற்றாலும் அவா் மீதான விமா்சனங்கள் குறைந்ததாக இல்லை. முதல் போட்டியில் தோனி 96 பந்துகளை எதிா்கொண்டு 51 ரன்கள் எடுத்தாா். அரைசதம் கடந்தாலும் அதிக பந்துகளை வீணாக்கியதாக அவா் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டியில் இறுதி வரை களத்தில் இருந்து விளையாடிய தோனி 54 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதி வரை போராடி இந்திய அணியை வெற்றிப்பெற செய்ததால் தோனிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

கோப்பையை வெல்லப்போகும் இன்றைய போட்டியில் தோனி 55 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். இந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் அரைச்தம் கடந்த தோனி தன் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.