ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை 7விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்திய அணி தொடரின் வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது. தோனியின் அபரமான ஆட்டத்தால் டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் போட்டியையும் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைந்தது.

1231

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி முதன் முதலாக இம்முறை வெற்றிப்பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், மெல்போர்னில் நடைபெற்ற 2வது போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதமும், தோனியின் அதிரடி அரைசதமும் அணியின் வெற்றிக்கு உதவியது.

இறுதியாக தோனி மற்றும் கார்த்திக்கின் நிதானமான ஆட்டத்தினால் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சாஹலின் அபாரமான பந்து வீச்சால் எளிதில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஹேன்ட்ஸ்கோப் மட்டும் 58 ரன்கள் எடுத்தாா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனா். இதனை தொடர்ந்து 48.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை எடுத்தது.

india

இந்திய அணியின் சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி தலா 2விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது.

ரோகித் சர்மா 9 ரன்களிலும், ஷிகர் தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார். விராட் கோலி – தோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. தோனி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி(46 ரன்கள்)ஆட்டமிழந்தார்.

Dhoni

கோலி அவுட்டால் 3விக்கெட்டை இழந்த இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து தோனியுடன் கேதர் ஜாதன் இணைந்தார். இருவ்ரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தோனி 114 பந்தில் அரைசதம் கடந்து 87 ரன்களையும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களையும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 49.2 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டியை 7விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்த்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் 2-1 என வென்று இந்தியா சாதனை படைத்துள்ள்து.