ஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…

Must read

சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்  3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள், தங்களது சொந்த நாடுகளை நோக்கி பயணித்து வருகின்றனர். அதுபோல, சிஎஸ்கே அணியில் உள்ள மற்ற வீரர்களையும், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் சிஸ்கே கேப்டனான தோனி ஈடுபட்டு வந்தார். அதற்கான ஏற்பாடுகளை காணொளி காட்சி மூலம் பேசி ஏற்பாடு செய்து வந்தார்.

அப்போது,  வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் வெளிநாடுகளில் தங்கள் வீடுகளுக்கு சென்றடைய வேண்டும், முதலில் வெளிநாட்டினர் வெளியேற வேண்டும், பின்னர் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று  கூறியதுடன்,  எல்லோரும் தங்கள் வீட்டை பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் அடைவதற்கான  ஏற்பாடுகளை செய்து வந்தார்.மஹிபாய் ஹோட்டலில் இருந்து வெளியேறும் கடைசி நபர் நானாக இருப்பேன் என்று கூறியிருந்தார்.

சிஎஸ்கே வீரர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக  சி.எஸ்.கே நிர்வாகம் டெல்லியில் இருந்து தனது வீரர்களுக்காக ஒரு சார்ட்டர் விமானத்தை ஏற்பாடு செய்தது. அதன் மூலம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.  பத்து இருக்கைகள் கொண்ட அந்த விமானம் காலையில் ராஜ்கோட் மற்றும் மும்பைக்குச் சென்றது, மாலை சார்ட்டர் விமானம் பெங்களூரு மற்றும் சென்னையிலிருந்து வீரர்களை இறக்கிச் சென்றது.

இதனால் தோனி சொந்த ஊரான  ராஞ்சிக்கு திரும்புவதை தாமதப்படுத்தி வந்தார். அனைத்து வீரர்களும் தங்களது சொந்தஇடங்களுக்கு சென்றதை உறுதி செய்துகொண்ட தோனி, இன்று (வியாழக்கிழமை)  மாலை ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு தனி விமானம் மூலம் பறக்க உள்ளார்.

More articles

Latest article