குர்கான்
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. இவரது மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்தார். அதையொட்டி குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிஷ் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை சிகிச்சை பலனின்றி ஆசிஷ் குர்கான் மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். இந்த செய்தியை சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டரில், “நான் எனது மூத்த மகன் ஆசிஷ் ஐ கொரோனா பாதிப்பால் இன்று காலை இழந்து விட்டேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெர்வித்துக் கொள்கிறேன்.
அவருக்கு நல்ல சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.