மும்பை:
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.சி.சி.ஐ விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இந்தநிலையில், ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel