போபால்:

த்தியபிரதேச மாநிலத்தில்  செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பல்லவி ஜெயின் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக   கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  91ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய பிரதேச மாநிலத்தில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. நேற்று வெளியான தகவலில் 83 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில்  40 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போபால் ஆலிம் கான் நகர கண்காணிப்பாளர் உள்பட 12 காவல்துறையினர். பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தகவல்களை தெரிவிப்பதில் மாநில அரசுக்கும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில்,  போபால் மற்றும் பிற முக்கிய  14 நகரங்களில் கொரோனா பாதிப்பு 290 என்ற எண்ணிக்கையில் இருந்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு இது 300 என அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த எண்ணிக்கை  324 ஐத் தொட்டது. நள்ளிரவில் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. இவர்களில் இந்தூரைச் சேர்ந்த ஆறு பேரும், உஜ்ஜைனியைச் சேர்ந்த மூன்று பேரும் அடங்குவர். மாநிலத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐத் தொட்டுள்ளது, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக ம.பி. உள்ளது.

சுகாதார ஊழியர்களிடையே கொரோனா தொற்று அதிக அளவு பரவி உள்ளதாகவும், மாநிலத்தின்  முதன்மை சுகாதார செயலாளர் சுகாதார பல்லவி ஜெயின்-கோவில் மற்றும் கூடுதல் இயக்குநர் டாக்டர் வீணா சின்ஹா ​​உள்ளிட்ட உயர் சுகாதாரத் துறை அதிகாரிகள் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.