போபால்

ன்று கூடிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மத்தியப் பிரதேச மாநில நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கூட இருந்தது.    சமீபத்தில் காங்கிரசைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சோதனையை அளித்துள்ளது.

அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை கோர முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட்டார்.   அதையொட்டி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான வாக்களிப்பு தேதி அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

கடும் எதிர்பார்ப்புக்களுக்கிடையில் தொடங்கிய இன்றைய கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்குப் பிறகு இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் வரும் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் கரணமாக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.