சென்னை:

மிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள அதிக அளவிலான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்து தொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  ஓய்வு பெற்ற 6,283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ரூ.1,093 கோடி ஓய்வூதிய தொகை கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், முதல்கட்டமாக இன்று ஓய்வூதியம் வழங்கிடும் அடையாளமாக 9 பேருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காசோலை வழங்கினார் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்தவர், மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய வாகன சட்டத்தின்படி, விதிமீறல் காரணங்களுக்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகை அதிகம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறியதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்று கூறியவர், விரைவில்  அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் என்றார்.

இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.