விசாகப்பட்டினம்,
நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர்.
தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள் அவர்களது தாயின் பெயரை பொறித்திருந்தது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அமித்மிஷ்ரா வின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணியை 79 ரன்னில் மடக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டியில் வெற்றி பெற்ற  இந்திய அணி தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் 190 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
cricket
முன்னதாக  நேற்று  விளையாடிய  இந்திய அணியினர் தங்கள் தாயார் பெயரிடப்பட்ட ஜெர்ஸியை அணிந்தபடி விளையாடினர்.
இது குறித்து டாஸ் வென்றபோது பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் தோனி,
தாயின் பெருமையையும், அருமையையும்  உணர்த்தும் வகையில் இவ்வாறு அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
தோனி தனது தாயார் பெயரான “தேவகி” பெயர் பதித்த ஜெர்ஸியை அணிந்திருந்தார்.