இன்று உலக தாய்மொழி தினம். இதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும்
இந்த உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும் அடையாளத்தையும் காத்து வளர்த்திட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
எல்லாம் சரிதான்.
ஆனால், தமிழ்நாட்டிலேயே புராதண சின்னம் ஒன்றின் நுழைவுச் சீட்டல் தமிழ் இல்லையே என்று ஆதங்கப்படு கிறார்கள் இணையதளவாசிகள் பலர்.
அவர்கள் குறிப்பிடுவது செஞ்சிக்கோட்டையை.
ஆம்..
செஞ்சிக்கோட்டையில் உள்ள ராஜா கோட்டைக்கு உள்ளே செல்வதற்கான நுழைவு சீட்டில் தமிழ் மொழியே இல்லாமல் ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டுமே திணிக்கப்பட்டுள்ளது” என்று குமுறுகிறார்கல் இணையதளவாசிகள்.
தாய்மொழி தினமான இன்றாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்காக நடவடிக்கை எடுப்பாரா?
தொல்லியல் துறையின் கீழ் இருப்பதால், தமிழ் மொழியும் கட்டணச்சீட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவாவது செய்வாரா?