மெல்போர்ன்: சற்று தாமதமாக துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ரோஜர் பெடரர் மற்றும் செரினா வில்லியம்ஸ் போன்ற முக்கிய டென்னிஸ் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மத்தியில் துவங்க வேண்டிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், இந்தாண்டு, கொரோனா காரணமாக மூன்று வாரங்கள் தாமதமாக துவங்குகிறது.
இந்நிலையில், இப்போட்டியில், எத்தனை டென்னிஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள்? என்ற கேள்வி எழுந்த நிலையில், கிட்டத்தட்ட அனைத்து பிரபல நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர் என்று போட்டி நிர்வாகி அறிவித்துள்ளார்.
ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிக், செரினா வில்லியம்ஸ், ஆஷ்லே பார்டி உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோஹா மற்றும் துபாயில் ஜனவரி 10-13 தேதிகளில் நடைபெறும் தகுதிச் சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர், ஜனவரி 15ம் தேதி முதல் சிறப்பு விமானங்களில் மெல்போர்ன் அழைத்து வரப்படுவர் என்று தெரிவிக்கப்படுவர்.