டில்லி
உலக சொத்து உரிமையாளர்கள் கணக்கெடுப்பில் இந்தியாவில் பெரும்பாலோருக்கு ரூ.7 லட்சத்துக்கும் குறைவான அளவில் சொத்து உள்ளது.
உலக அளவில் கிரெடிட் சூயிஸ் சமீபத்தில் சொத்துக்கள் வைத்திருப்போர் குறித்த கணக்கு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு தனிப்பட்ட மனிதருக்கு அதிக அளவில் 5,64,650 டாலர் அளவுக்குச் சொத்து உள்ளதாகக் கூறப்பட்டு முதல் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அமெரிக்கா 4.32 லட்சம் டாலர், ஆஸ்திரேலியா 3.86 லட்சம் டாலர் மற்றும் சிங்கப்பூர் 2.97 லட்சம் டாலர் என உள்ளன.
சென்ற வருடம் உலக அளவில் தனிப்பட்டவர்கள் சொத்துக்கள் 2.6% வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மத்தியில் இது 1.2% ஆக இருந்தது உலகில் உள்ள மொத்த செல்வந்தர்களில் 44% கோடீஸ்வரர்கள் ஆக உள்ளனர். அமெரிக்காவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்தபடியாக ஜப்பான் மற்றும் சீன நாடுகள் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரை சொத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் செல்வந்தர்கள் எண்ணிக்கை அதே விகிதத்தில் அதிகரிக்கவில்லை. அதாவது செல்வந்தர்களாக இருந்தவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள் ஆகி உள்ளனர் என இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன. இந்தியர்களின் சராசரி சொத்து மதிப்பு 14,459 டாலராக உள்ளது. ஆனால் 78% பேருக்குச் சொத்துக்களின் மதிப்பு 10000 டாலருக்கும் குறைவாக அதாவது ரூ7 லட்சம் அளவுக்கு உள்ளது.
ஒரு லட்சம் டாலர்கள் அதாவது ரூ.73 லட்சம் அளவுக்குச் சொத்து உடையவர்கள் 1.8% பேர் மட்டுமே உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் வரும் 2.24 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 12 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என தெரிய வந்துள்ளது. பலருக்குச் சொத்துக்கள் அதிகரித்துள்ள போதிலும் கடன்களும் அதிகரித்துள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.,