டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவப்பு கலரால் கட்டமிடப்பட்டுள்ள இரு வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 13 பேர் பலியாகினர். இவர்களில்  உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் தீயில்கருகி அடையாளம் காணமுடியாதபடி இருந்ததால், அவர்களின் ரத்த உறவினர்கள் மூலம் டி.என்.ஏபரிசோதனை நடைபெற்றது.

இதில்,   மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. அதன்படி, உயிரிழந்த அதிகாரிகளான  சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவர்களின் உடல்கள்   இன்று அதிகாலை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]