கன்னடத்தில் பிரபலமான ஹீரோயின் ஸ்ருதி. இவர் தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவரின் புகைப்படங்களை சில மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து (மார்ஃபிங் செய்து) சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி நேற்று காலை பெங்களூரில் காவல்துறை ஆணையாளர் பிரவீண் சுட்டை சந்தித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் மூலம் அந்த மர்ம நபர்களை தேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.