morning-news1-full
காஷ்மீர் எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
தென் கொரிய கடலோர காவல் படையினருடன் சீன மீனவர்கள் மோதல்
அக்.13ல்இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஐ.என்.எஸ்.தலைவராக சோமேஷ் சர்மா தேர்வு
இந்தியப் பயணத்தை ரத்து செய்தார் பாக். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
காவிரி விவகாரம்: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சென்னையில் பரவலாக மழை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதன் மூலம், இந்தியாவின் நிலையான ராஜதந்திர நடவடிக்கை மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளார் என கூறப்படுகிறது
பயங்கரவாதிகளுக்கும், பாக்., அரசுக்கும் கடுமையான செய்தியை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் சற்று அடக்கி வாசிக்கும்படி பாகிஸ்தான் அரசு, அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர்கள் தற்போது அமைதியாக உள்ளனர்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உரிமை கோராது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு ஒப்புக்கொண்டால், பயங்கரவாதிகள் செயல்படுவதை ஒப்புக்கொள்வது போல் ஆகிவிடும். தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் நம்மிடம் உள்ளது” என தெரிவித்தன*
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கம்பர்நத்தத்தில் 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அரசு பள்ளியில் சுற்றுச் சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது சிலைகள் கண்டெக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். தமிழகத்தைப் போல், தனி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டி, கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த புதுவை அரசு, இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடிவெடுத்தது. காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில், துளசிமணி என்ற திருநங்கைக்கு கலெக்டர் பார்த்திபன், ரேஷன் கார்டை வழங்கினார்.
‘காரைக்கால் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. திருநங்கைகளுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும். ஆண், பெண்களுக்கு நிகராக நாங்களும் அப்போதுதான் சாதிப்போம்’ என்று கூறுகின்றனர் திருநங்கைகள்*
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இரு சக்கர வாகனம் வேகமாக மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேக்ஸிசிக்கோ நாட்டில் உள்ள குலியாக் என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய வழக்கறிஞர் அருள்மொழிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வந்த பொது வழக்கறிஞர் அருள்மொழி தப்பியோடினார்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டியவை உள்ளாட்சி மன்ற பதவிகள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பான, ஜனநாயக நெறிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் முக்கிய திரையரங்குகள் இந்தியப் படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன
சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை.அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது.தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன
பொது இடங்களில் முகத்தை மூடி கொள்ளும் துணிகள் அணிவதை பல்கேரிய நாடாளுமன்றம் தடை செய்திருக்கிறது
ஜெர்மனியின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான டாய்ச்செ வங்கியின் ஸ்திரத்தன்மை மீது எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய வங்கிகளின் பங்குகள் சரித்துள்ளன.
அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களை கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு: டீசல் விலை குறைப்பு
நிதி ஒதுக்குவதால் மட்டும் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியாது: நரேந்திரமோடி
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்: ராணுவத்துக்கு கேரளம், தில்லி பேரவையில் பாராட்டு
காவிரி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
இந்திய ராணுவத் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை: ஆப்கானிஸ்தான் ஆதரவு
விதிமீறிய விளம்பரப் பலகைகளை அகற்ற 2 மாதங்கள் கெடு
காந்தி புகைப்படக் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு: 9 புதிய ரயில்கள் அறிமுகம்
வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் நிறைவு
தீங்கிழைக்கும் நோக்கில் பாகிஸ்தானை யாரும் நெருங்க முடியாது
உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கருணாநிதியுடன் ஈஸ்வரன் சந்திப்பு
இந்தியப் பயணத்தை ரத்து செய்தார் பாக். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பு: சீனா கவலை
அணு ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்: ஹிலாரி பரபரப்பு பேச்சு
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் தாமதம்
பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி: இன்றும் நாளையும் நடைபெறுகிறது
உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 86 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 1,65,644 பேர் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
“சைபர் தாக்குதலுக்கு இந்தியா தயார்’
உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தடை கோரவில்லை
புறக்கணிப்பு எதிரொலி: சார்க் மாநாட்டை ஒத்திவைத்தது பாகிஸ்தான்