பேரவையில் இன்று…
பேரவையில் புதன்கிழமை (ஆக.31) கேள்வி நேரத்துக்குப் பிறகு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். முன்னதாக, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை (ஆக.30) நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் எம்.ராஜலட்சுமி, எஸ்.வளர்மதி ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
போதையில் கார் ஓட்டி விபத்து போலீசில் நடிகர் அருண் விஜய் சரண் : எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
5000 பெண்களை வைத்து விபசாரம்.. கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி கைது
ஜம்மு : சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
உள்ளாட்சித் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 603 பேருக்கு மர்ம காய்ச்சல் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு. மொத்தம் 603 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கனமழை காரணமாக வாரணாசியில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தெருக்களில் உள்ள சேற்று மற்றும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் இடர்பாட்டில் உள்ளனர். இதனையடுத்து வெள்ளம் புகுந்த வீடுகளை மக்கள் சுத்தம் செய்கின்றனர். மேலும் தெருக்களிலும் சேற்று உள்ளதால் மக்கள் வீதிகளில் செல்ல சிரமப்பட்டுள்ளனர்.
ராபவுலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு. பப்புவா நியூ கினி: பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள ராபவுலில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் அணைகள் கட்டி இருப்பது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அல்ல–போராட்டம் நடத்தினால் பயந்துவிட மாட்டோம்–சட்ட அமைச்சர் ஜெயசந்திரா
என்னை நாடு கடத்திய இந்திரா காந்தியை சிறையில் தள்ளி பழிவாங்கினேன்: ராம்ஜெத் மலானி
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயர் உச்சவரம்பை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்– திமுக தலைவர் கருணாநிதி
ஐம்பது ஆண்டுகள் பழமையான எதிரிச் சொத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் நான்காவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்–ஒரு மாதம் அவகாசம்
குர்பானிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவையில் மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார்.
காவிரி தண்ணீர் திறக்கக் கோரி போராட்டம்: 6 ஆயிரம் பேர் கைது: டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 வருட போனஸ் வழங்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 1 முதல் 31 வரை மட்டும் 1261 குழந்தைகளை மீட்டுள்ளது ரயில்வே படை.இக்குழந்தைகள் தனித்து விடப்பட்டவர்களாகவும், கடத்தி வரப்பட்டவர்களாகவும், காணாமல் போனவர்களாகவும் உள்ளனர்.இந்த மீட்டெடுப்பு நாட்டின் 20 முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடத்தப்பட்டுள்ளது.
தவறாக வழிகாட்டும் விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு இனி சிக்கல்தான். அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க புதிய சட்ட மசோதா உருவாகியுள்ளது. இம்மசோதா தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழு விவாதித்து வருகிறது
ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி அனைத்து விதிமுறைகளையும் மாற்றி அமைக்கும்படி அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில், முதல் முதலாக, திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட பெரு நகரம், குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்தது. இந்த நகரம், 3,450 ஆண்டுகளுக்கு முன், சுனாமியால் அழிந்திருக்கும்’ என, தொல்லியல் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உ.பி., மாநிலம், கான்பூர் நகரில், உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட, 12 வயது சிறுவனை, அரசு மருத்துவமனை ஊழியர்கள் சேர்க்க மறுத்ததால், வேறு மருத்துவ மனைக்கு அச்சிறுவனை தோளில் சுமந்து சென்றார் தந்தை; ஆனால், அதற்கு முன்பே, அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவ மனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு, ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த, சிந்து, சாக் ஷி மாலிக், தீபா கர்மாகர், தீபிகா குமாரி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில், ‘ஆதார்’ அடையாள அட்டை திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே போலீஸ் கான்ஸ்பிடள் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 6 இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பின் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜி மீது ரூ.60 லட்சம் மோசடி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல், பிரதமரைக் குறைகூறுவதில்தான் ஆம் ஆத்மியின் கவனம் உள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் குற்றம்சாட்டினார்.
மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் பகுதியில் உள்ள ஒரு அரசு மாநில உயர்நிலை பள்ளியில் முதலமைச்சர் ராமன் சிங், மாணவர்களுக்கு நேற்று வகுப்பு நடத்தினார்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரிக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்து மாணவியை அடித்துக் கொன்ற முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.350-ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இப்போது தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.246-ஆக உள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை கூடுதல் வட்டியுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
தலிபான் பயங்கரவாத அமைப்பின் புதிய தளபதியாக மவுல்வி இப்ராஹிம் சதர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
ஜம்மு-சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்விலும் முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரிலுள்ள, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்(பி.எஸ்.எப்.,), அப்பணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கனடா, வான்கூவரில் நடந்த மாஸ்டர் கேம்ஸ் போட்டியில் கலந்துகொண்டார் நம் நாட்டு பாட்டி மன் கவுர்(100 வயது).100மீ ஓட்டப்பந்தயத்தில் 1 நிமிடம் 21 வினாடிகளில் இலக்கை அடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.ஆண்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் ஓடிய ஒரே பெண் இவர்தான்.