Morning news
🌏 ஜம்மு-காஷ்மீரில் பிரச்னைகளைத் தீர்க்க அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்
🌏காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு/ தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை பெற்றிட சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு விரைவில் தாக்கல் செய்ய போவதாக குறிப்பிட்டார்.
🌏டெல்லியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது/ புதுடெல்லியில் உள்ள மாண்டவளி பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🌏10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சிகளின் அங்கீகாரம் ஆய்வு! – தேர்தல் ஆணையம். கட்சிகளின் அங்கீகார வரையறையை 5 ஆண்டுகாலளில் இருந்து 10 ஆண்டுகள் என தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தற்போது காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் நடத்தப்படும் தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேசிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற தவறினால், அவை தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்க நேரிடும். இதேபோல், மாநில கட்சிகள் (பிராந்திய கட்சிகள்) சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாவிட்டால், அவை மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிடும்
🌏எண்ணூர்-திருச்சி-மதுரை இடையே குழாய் மூலம்.சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் நிறைவேறற் இருப்பதாக சுபோத் டேக்வாலி தெரிவித்தார்.. அப்போது அவர், ”எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதன்படி தமிழகத்தில் சென்னை – திருச்சி – மதுரை இடையே 526 கிலோ மீட்டர், திருச்சி – சங்ககிரி இடையே 157 கிலோ மீட்டர் மற்றும் திருச்சி காவிரி படுகை பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
🌏உத்தர பிரதேசத்தில் படகில் குழந்தையை பெற்ற பெண். உத்தர பிரதேச மாநிலம், பண்டா பகுதியில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் படகில் குழந்தையை பெற்றுள்ளார்.
🌏கொங்கு இளைஞர் பேரவை பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. தாராபுரம் சென்னியப்பா நகர் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர். இவரின் சகோதரர் தனியரசு. காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தெய்வசிகாமணியின் வீட்டை சிலர் நோட்டமிட்டுள்ளனர். இது குறித்து தாராபுரம் காவல்நிலையத்தில் தெய்வ சிகாமணி புகார் அளித்து விட்டு தனது பைக்கில் வீடு திரும்பினார். அப்போது, பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை தெய்வசிகாமணி வீட்டின் மீது வீசியதாக கூறப்படுகிறது.
🌏ராஜஸ்தானில் டிரக் – கார் மோதி விபத்து: 7 பேர் பலி. தோல்பூர் மாவட்டத்தில் ஒரு டிரக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இருந்து 8 பேருடன் வந்த கார் ஒரு டிரக் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
🌏ராதாவை மிரட்டியது எனது கணவர் இல்லை.. ரவுடி வைரம் மனைவி பரபரப்பு பேட்டி. செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக ராதா சொன்ன ரவுடி வைரத்தின் மனைவி லீனா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
🌏சசிகலா புஷ்பா மனு ஒத்திவைப்பு. சசிகலா புஷ்பா, கணவர், மகன், முன் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடி போலீசில் புகார் அளிக்கபட்டது.
🌏சிந்து பதக்கம் வென்றது மற்ற வீரர்களுக்கு ஊக்கத்தை தந்துள்ளது: பயிற்சியாளர் கோபிசந்த் பேட்டி. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இதில்  சிந்துவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளதாக கோபிசந்த் தெரிவித்தார். சிந்து பதக்கம் வென்றது மற்ற வீரர்களுக்கு ஊக்கத்தை தந்துள்ளது என்றார்.
🌏பிசிசிஐ-யின் ஆண்டு பொது கூட்டம் மும்பையில் செப்டம்பர் 21-ம் தேதி ஆரம்பம். பிசிசிஐ-யின் ஆண்டு பொது கூட்டம் மும்பையில் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
🌏கடுமையான பயிற்சியே வெற்றிக்கு காரணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிவி சிந்து பேட்டி. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் கடுமையான பயிற்சியே வெற்றிக்கு காரணம் என பேட்மின்டன் வீராங்கனை சிந்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவு, அது நிறைவேறியது மிகந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று சிந்து கூறினார்.
🌏நாகபுரி ரமேஷ், சாகர் மால் தயால் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிப்பு. தடகள பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் தயால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, நீச்சல் பயிற்சியாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
🌏ரஹானே உள்பட 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
ரஹானே, லலிதா பாபர், சிவ தபா ,அபூர்வி சாண்டெலா உள்பட 15 விளையாட்டு வீரர்களுக்கு 2016-ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது.
🌏சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள அரண்மனைகாரன் தெருவில் ஒரே நாளில் இரண்டு கட்டிடத்துக்கு CMDA சீல்
🌏தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள்; ஸ்டாலின் குற்றச்சாட்டு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபையில் தி.மு.க., உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பெரிய கருப்பன், கீதாஜீவன், மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டி: சஸ்பெண்ட் உத்தரவை சபாநாயகர் ரத்து செய்யாதது நாங்கள் எதிர்பார்த்தது தான். இதனால் தான் நாங்கள் கோர்ட்டை நாடியுள்ளோம். போலீஸ் மீதான மானிய கோரிக்கையில் பங்கேற்க கூடாது என்பதற்காக தான் நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம். இதில் சந்தேகம் இல்லை. மீடியாக்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் பல அவதூறு வழக்குகள் போடப்படுகிறது.
தமிழகத்தில் பல கொடுமைகள் நடக்கின்றன . எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியம் நடைபெறும் இன்று கூட கோயில்களில் தனியார் நிறுவனங்களில் கொள்ளைகள் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சட்டசபையில் மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கபட்டது குறித்து அவர்கள் தான் போராட வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது சட்டசபையில் மீடியாக்களுக்காக குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
🌏ஜப்பானில் கனமழை.. ரயில், விமான சேவை பாதிப்பு! டோக்கியோவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓடு பாதையில் மழை நீர் தேங்கியிருப்பதால் 300 உள்நாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
🌏பி.வி.சிந்து, ஜிது ராய், சாக்சி மாலிக், தீபா கர்மாகருவுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய், மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
🌏பிரபல ரவுடி கொலையில் 5 பேர் சரண்.   திருவள்ளூர் அருகே சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெய்சீலன், இரண்டு தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மகி, பெரம்பூரை சேர்ந்த பிரபாகர், கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரேந்திரன், செஞ்சி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, இருவஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கமல் ஆகிய 5 பேரும் திருவள்ளூர் டி.எஸ்.பி. விஜய்குமார் முன்பு சரண் அடைந்தனர். கொலை காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.
🌏அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு  உடல்நலம்  நலப்பாதிப்பு!. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் இரவு உணவு உட்கொண்ட மாணவிகளள் 56 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவிகளுக்காக, கல்லூரி வளாகத்தில் விடுதி உள்ளது. அங்கு தங்கி இருக்கும் மாணவிகள் நேற்று இரவு விடுதியில் உணவு உட்கொண்டுள்ளனர். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதற்கிடையே மேலும்சில மாணவிகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நேற்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இன்று காலை 30 மாணவிகள் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் உடல் நல பாதிப்பு குறித்து சுகாதார துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். மாணவிகள் உடல் நலம் சிகிச்சைக்கு பின் சீராக இருப்பதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.
🌏 ஆந்திர அரசைக் கண்டித்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம். ஆந்திர மாநிலத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரம் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டு வருவதையும், பாலாற்றின் துணை நதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுவதையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
🌏சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்க கிரீடம், அம்பாளுக்கு ஒட்டியானம்: சென்னை பக்தர் குடும்பத்தினர் வழங்கினர்.சிதம்பரம் நடராஜருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடம், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானம் ஆகியவற்றை சென்னை பக்தர் குடும்பத்தினர் வழங்கினர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை மற்றும் உலக அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை 28-ம் தேதி  முதல் தொடங்கி செப்.15-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு நாளான செப் 15-ம் தேதி மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ர நாம ஹோமம் மற்றும் ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த பக்தர் காயத்திரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமிசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியானமும் செய்து திங்கள்கிழமை  கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் வழங்கினர். இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும். நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானமும் சிறப்பு ஆராதனைக்கு பிறகு திங்கள்கிழமை பொதுதீட்சிதர்களால் பொருத்தப்பட்டது.
🌏திண்டுக்கல் மாவட்டம் நத்தம் – கொட்டாம்பட்டி சாலையில் சம்பப்பட்டியில் அதிகாலை 2.30மணிக்கு  வீடு கட்டுவதற்கு தேவையான டைல்ஸ் கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து   திருவாடானை மேலையூரை சேர்ந்த ஜோசப்(35).காளிதாஸ்(45).ஆரோக்கியம்(55)  3 பேர் சம்பவ இடத்தில் பலி.டிரைவர் ராஜப்பன் உள்பட 6பேர் காயம்..காயமடைந்தவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதி…இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை..
🌏 அசாம் மாநிலம் கவுகாத்தி. கர்பி அங்லாங்கில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவு
🌏மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,308 கனஅடியாக அதிகரிப்பு , ஒரே நாளில் ஒரு அடி உயர்வு நேற்று முன்தினம் அணைக்கு நீர் வரத்து 6,160கனஅடியாகவும், நேற்று7,988கனஅடியாகவும், இன்று காலை 9,308 கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிலவரம். மேட்டூர் அணை நீர்மட்டம் : 67.170அடி.   ணைக்கு நீர் வரத்து : 7?9,308கனஅடி.    அணை நீர்மின் நிலையம் வழியாக 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்யிருப்பு : 30.318டி.எம்.சி.
🌏திருச்சி கல்லணை ரோடு சர்க்கார் பாளையத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் சூரிய பூஜை நடந்தது. இதையொட்டி மூலவர் காசிவிசுவநாதரை சூரியன் வழிபட்ட பரவச காட்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
🌏புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகின்றது. நாளை காலை 9.30 மணிக்கு ஆளுனர் கிரண்பேடி உரையாற்றுகின்றார். வரும் 29 ந்தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி 2016-17 க்கான நிதிநிலை அறிக்கையினை அவையில் தாக்கள் செய்கின்றார்.
🌏மதுரையில் ஒருவர்  வெட்டி கொலை . மதுரை சமயநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன். செல்லூர் பகுதியில் இன்று காலை செல்லும் போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலேயே பலி. இது குறித்து மதுரை  செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை . முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது.
🌏செவாலியே விருது பெரும் நடிகர் கமலஹாசனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து செவாலியே விருது பெரும் நடிகர் நடிகர் கமலஹாசனுக்கு திமுக தலைவர் கருணாநிதி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்து திரையுலகில் நிரந்தர இடத்தை இடத்தை கமல் பிடித்துள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
🌏ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த ராணுவ வீரர் கைது ஓடும் ரயிலில், கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த ராணுவ வீரரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமோத், 38. டில்லி ராஜ்கோட்டில் ராணுவ வீரராக பணி புரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த பிரமோத், டில்லிக்கு செல்ல நேற்று முன்தினம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ், 10 பெட்டியில் முன் பதிவு பயணம் செய்தார். அதே பெட்டியில், பிரமோத் படுத்திருந்த பர்த்துக்கு பக்கத்து பர்த்தில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த மகேஸ்வரி, 22, என்ற இளம் பெண் பயணம் செய்தார். இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்து வருகிறார்.
சொந்த ஊருக்கு செல்ல மகேஸ்வரி இந்த ரயிலில் ஏறினார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே நேற்று அதிகாலை, 2.30 மணிக்கு அந்த ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது குடி போதையில் இருந்த பிரமோத், மாணவியிடம் சில்மிஷம் செய்தார். பயத்தில் மாணவி கூச்சலிட்டார். சத்தத்தை கேட்டு, பெட்டியில் இருந்த சக பயணிகள் எழுந்தனர். அவர்களிடம் அந்த மாணவி நடந்ததை கூறினார். ஆத்திரமடைந்த பயணிகள், பிரமோத்துக்கு தர்ம அடி கொடுத்தனர். ரயிலில் வந்த டி.டி.ஆர்., பஞ்சாபிகேசவன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் ஜோலார்பேட்டைக்கு வந்ததும், மாணவி மகேஸ்வரி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணுவ வீரர் பிரமோத்தை கைது செய்தனர்.
🌏தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ₹2,977.00
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ₹23,816.00
24 கேரட் தங்கம் 10 கிராம் – ₹25,472.00
வெள்ளி: ஒரு கிராம் – ₹49.00
வெள்ளி கட்டி ஒரு கிலோ – ₹45,800.00.