சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்

Must read

சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவர் நாதன். தமிழரான (வயது 92) இவரது இயற்பெயர் செல்லப்பன்.
இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென  இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவே   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பினார்.    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு  மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
srnathan-22-1471879182
நாதன் சிங்கப்பூர் அரசில் பல உயரிய பதவிகளை வகித்தவர். கடந்த 1988-ஆம் ஆண்டு மலேசியாவுக்கான உயர் ஆணையராகவும், 1996-இல் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார் நாதன்.
அதன்பிறகு, 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.  மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் “பிரவாசி பாரதிய சம்மான்’ விருது கடந்த 2012-ஆம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article