டில்லி
இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதையொட்டி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வில் மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், :தற்போது நாட்டில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலை மற்றும் ஆர்வம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
இதுவரை பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பணி புரிவோரில் 92$க்கும் மேர்பட்ட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 96%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.