பாட்னா: பீகாரில் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவரும், எம்எல்ஏவுமான அக்தருல் இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் மழைக்காலம் தொடங்கி உள்ளதால், காட்டில் வசிக்கும் நாகபாம்புகள் உள்பட பல உயிரினங்கள் பாதுகாப்பு தேடி, நகர்ப்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில், பீகாரில் ஒரு வீட்டில் நாகப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக தகவல்கள் பரவின. விசாரணையில், நாகப்பாம்புகள் குடியிருந்த இடமானது, அங்குள்ள ஓவைசி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அக்தருல் இமானின் வீடு என்பது தெரிய வந்துதுள்ளது. அக்தாருல் இமான் கிஷன்கஞ்ச் தொகுதியின் AIMIM எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார்.
இமான் அகமத்நகர் கிராமத்தில் உள்ள கோச்சத்தமன் தொகுதியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். அங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது விட்டில் நாகப்பாம்புகள் குடியிருந்து வருவதை கண்ட இமான் இதுகுறித்த பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, பாம்புபிடிக்கும் தொழிலாளி சம்பவ இடத்துக்கு வந்து பாம்புகளை பிடிக்கத் தொடங்கினார். ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து பாம்புகள் பிடிக்கப்பட்டன,. முதலில் வீட்டில் இருந்து 10 நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் சென்றுவிட்டார்.
ஆனால், அடுத்த நாள் மீண்டும் நாகப்பாம்புகள் தென்படவே, மேலும் பாம்புகள் இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதையடுத்து, பாம்புகளை தேடி பிடிக்க வசீகரன் கட்டாயப்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவர் மகுடி இசைத்து, பாம்புகளை அழைக்க, அடுத்தடுத்து ஏராளமான பாம்புகள் வெளிய வந்தன. அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிடிக்கப்பட்டன.
இதைக்கண்ட பாம்பு பிடிப்பரும் அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 40 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோப்ரா வகையை சேர்ந்த நச்சு பாம்பு என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய பாம்பாட்டி, முதலில், சில நாட்களுக்கு முன்பு , அவர் ஒரு நாளைக்கு முன்பு 10 பாம்புகள் பிடிக்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து ஏராளமான பாம்புகளை அங்கிருந்து வெளியே எடுத்துள்ளோம். இவை அனைத்தும் சிறிய நாகப்பாம்புகள். இதில் சில இறந்து விட்டன. இன்னும் 35 குட்டி நாகப்பாம்புகள் உள்ளன என்றார். மேலும் இந்த நாகப்பாம்பின் தாய், தண்ணீர் குழாய் வழியாக நுழைந்து, இங்கு வந்து தஞ்சமடைந்து, முட்டையிட்டிருக்கலாம். அதனால்தான் இவ்வளவு நாகப்பாம்புகள் இருந்துள்ளது என்றார்.
சில நாட்களுக்கு முன்பு, பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பல விஷப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக மழைக்காலத்தில் பாம்புகள் அவற்றின் புற்றுகளில் இருந்து வெளியேறி, வேறு இடங்களில் தஞ்சமடைவதரால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என வனஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.