காஷ்மீரை தாக்க 300 பாக்., தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்….ராணுவம் பகீர் தகவல்

Must read

டில்லி:

இந்தியாவுக்குள் ஊடுறுவ 300 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக் கோடு அருகே தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ தளபதி தேவராஜ் அன்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவுக்குள் ஊடுறுவ 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானின் எல்லைக்கோடு அருகே தயாராக காத்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது.

பீர் பஞ்சால் வடக்கு பகுதியில் 190 முதல் 225 வரையிலான தீவிரவாதிகளும், தெற்கு பகுதியில் 185 முதல் 220 வரையிலான தீவிரவாதிகளும் ஊடுறுவ தயாராக உள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருக்கிறது.

எல்லைக்கு கோட்டை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்துவது என்பது மிகவும் சிக்கலான மற்றும் சவாலானது. இந்த செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்று நினைக்கிறேன். நாங்கள் இதை எதிர்கொள்ள ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

More articles

Latest article