டெல்லி: வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சமுகவலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. இன்றைய மக்களிடையே எளிதாக தகவலை தெரிவிக்கும் ஊடகமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. அதே வேளையில் இதன்மூலம் வதந்திகள், சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. இதையடுத்து, மத்தியஅரசு சமுக ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள், பெறப்படும் புகாா்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டுமென மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, . விதிமீறல் குறித்து அளிக்கப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மாதந்தோறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள கடந்த ஜூன் மாதத்துக்கான அறிக்கையில், 22.10 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. விதிமீறல் தொடா்பாக நிறுவனத்துக்கு வந்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைத் தொடர்ந்து, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஜூன் மாதத்தில் இந்தியாவில் 22 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது. தங்களது கவனத்துக்கு மொத்தம் 632 புகார்கள் வந்தன, அவற்றில் 64 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மைகள், ‘தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில்’ முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சேவைகளில் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் இருப்பதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு முதல் உயர் தொழில்நுட்ப தொழில்நுட்பங்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் மற்றும் பலவற்றில் பயனர்களை எங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முதலீடு செய்துள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளையும், மாா்ச்சில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்ஆப் முடக்கியிருந்தது. ஜூனில் அது 22 லட்சமாக அதிகரித்துள்ளதுபுகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிப்பதற்கான தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.