திரிபோலி

லிபியா நாட்டில் கடும் வெள்ளம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.  தற்போது லிபியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் நிலையில், லிபியாவை டேனியல் புயல் தாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களைப் புயல் தாக்கியது.

புயலால், கனமழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து பலர் மாயமாகியுள்ளனர். தவிர ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துதை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

முதலில் கிரீஸ் நாட்டில் டேனியல் புயல் பெருவெள்ளம் ஏற்படுத்தி பிறகு லிபியா நாட்டில் கடந்த ஞாயிறு பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இங்குள்ள வாதி டெர்னா ஆறானது மலையில் இருந்து தொடங்கி, நகரம் முழுவதும் சென்று மத்திய தரைக்கடல் பகுதியில் கலக்கும். வருடத்தில் பல நாட்கள் வறண்டிருக்கும் நிலையில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கனமழையில் மற்றும் நீர் தேங்கியதில், 2 அணைகள் திடீரென வெடித்ததில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல பாலங்கள் சேதமடைந்து அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. இந்த டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.

கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர், 18,000 முதல் 20,000 பேர் உயிர் இழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால்  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

கடந்த 1970களில் கட்டப்பட்ட அணைகள். டெர்னாவிற்கு வெளியே இடிந்து விழுந்துள்ளன என்றும், அவை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என்றும்  அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.