காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இருந்து இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை வெளியேற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் குழப்பமான நிலை காரணமாக காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் என 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அமைச்சரவை செயலாளர், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் படி இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காபூலிலிருந்து பல்வேறு நாடுகள் தங்கள் அதிகாரிகளை படிப்படியாக வெளியேற்றி வரும் நிலையில், கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக இந்தியத் தூதரக அதிகாரிகள் ஏன் வெளியேற்றப்படவில்லை என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel