ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

Must read

ஜெனிவா: 
ப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று  ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில்  பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும்  குழந்தைகள் என அனைவரும் ஒரு பயத்துடனே வாழ்கின்றனர்.
தற்போதைய நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு,   ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில்,  இந்தியா தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வந்தது.
சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், ஐ.நா. ராஜதந்திர மற்றும் தூதரக பணியாளர்கள் உட்படச் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட தரப்பினரை உதவுமாறும்  நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ்,ஆப்கான் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது என்றும்  ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அகதிகளை  உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

More articles

Latest article